அருந்தவச் செல்வர் அரிராம்சேட்

அருந்தவச் செல்வர் அரிராம்சேட், சின்னராசு – முத்தப்பா, யூகே பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.200 அரிராம்சேட் வடநாட்டுக்காரர் அல்ல; நெல்லை மாவட்டத்திலுள்ள முக்கூடல்காரர். இவரை ஒதுக்கிவிட்டு தியாகராஜ பாகவதரின் வரலாற்றை எழுதிவிட முடியாது. அந்த அளவுக்கு பாகவதர் மீது ஈடுபாடு கொண்டு, இசை கற்றுத் தேர்ந்து, பின்பு பாகவதரோடு இணைந்து இசைக் கச்சேரிகள் செய்திருக்கிறார். எம்.ஆர்.ராதா, கலைவாணர், எம்.ஜி.ஆர், சிவாஜி, கண்ணதாசன், திருவாவடுதுறை ராஜரத்தினம் ஆகியோரின் திறமையையும் கொண்டாடியிருக்கிறார். அவரது இந்த வரலாற்று நூலில் உள்ள செய்திகள் வியப்பூட்டுகின்றன. அவர் வளர்த்த யானைகளின் பாதங்கள் பழுதுபடக் […]

Read more

அருந்தவச் செல்வர் அரிராம் சேட்  சின்னராசு

அருந்தவச் செல்வர் அரிராம் சேட்  சின்னராசு, முத்தப்பா, யூகே மேக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.272,  விலை  ரூ.200. த.பி.சொக்கலால் ராம்சேட் பீடி நிறுவனத்தை நடத்திய த.பி.சொக்கலால் ராம்சேட்டின் வரலாறு இந்நூலின் முதல் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு அவருடைய மகன் அரிராம் சேட்டின் வரலாறு நூல் முழுக்க மிகச் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளது. அரிராம் சேட் சிறுவயதிலேயே கார்களின் மீது அளவுக்கதிகமான காதல் கொண்டிருந்தது, இளைஞனாக ஆன பிறகு பல மாடல்களில் பல நவீனமான கார்களை வாங்கிப் பயன்படுத்தியது, தன்னிடம் வேலை செய்பவர்கள், தன்னுடைய உறவினர்களுக்கு மட்டுமல்லாமல், எல்லாருக்கும் […]

Read more