ஈழம் 87
ஈழம் 87, வரலாற்று ஓவியப் பதிவு, தாய்ப்பனை வெளியீடு, விலை 500ரூ.
ஓவிய வடிவில் ஈழப்பிரச்னை
ஈழப் பிரச்னையை விளக்கும் பல நூல்களுக்கு மத்தியில் அப்பிரச்னையின் ஒரு முக்கிய காலகட்டத்தைர ஓவியங்களின் மூலமாகச் சொல்கிறது இந்த நூல். அங்கங்கே வர்ணனையாக குறிப்புகளை உணர்வுடன் எழுதி இருப்பவர் புகழேந்தி தங்கராஜ்.
1987ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரபாகரன் – ராஜீவ்காந்தி சந்திப்பு முதல் அதன் பின்னர் நிகழ்ந்த இந்திய அமைதிப்படை – புலிகள் மோதல் போக்கு என 1987 முதல் 1990 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த வரலாற்று சம்பவங்களின் ஓவியத் தொகுப்பே இந்த நூல்.
குர்கிரத் சிங், பூபீந்தர் சிங் மாதிரியான நேர்மையான இந்திய ராணுவத் தளபதிகளின் செயல்பாடுகளையும் இந்நூல் சமநிலையுடன் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பதிப்பாளர் லோகேஷ் இந்நூலுக்காகச் செய்திருக்கும் உழைப்பும், அதன் விளைவாக உருவாகி இருக்கும் இந்நூலின் அழகான கட்டமைப்பும் வியக்க வைக்கின்றன.
நன்றி: அந்திழை, ஜுலை 2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027059.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818