ஹேரி பாட்டரும் சபிக்கப்பட்ட குழந்தையும்
ஹேரி பாட்டரும் சபிக்கப்பட்ட குழந்தையும், ஜேக் தார்ன், தமிழாக்கம் பொன்.சின்னதம்பி முருகேசன், பிளம்ஸ்பயூரி இந்தியா வெளியீடு,
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜே.கே.ரவுலிங் எழுதிய ஹேரிபாட்டர் நாவல்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. கற்பனையான மாயா ஜால உலகை கருப்பொருளாக கொண்டு வெளியா 7 நாவல்களின் கடைசி நூல் 2997ல் வெளியானபோது, மீண்டும் மாயாஜால உலகிற்கு எப்போது செல்வோம்? என ஏங்கி தவித்திருந்த ஹேரிபாட்டர் ரசிகர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்தான் ஹேரி பாட்டரும் சபிக்கப்பட்ட குழந்தையும். மூலக்கதையை தழுவி ஜேக் தார்ன் எழுதியுள்ள இந்த நூல் ஹேரிபாட்டரின் மகன் மாயாஜால உலகிற்கு செல்வதும், அங்கு அவன் சந்திக்கும் வினோதங்களையும் விவரிக்கிறது.
வழக்கமான ஹேரிபாட்டர் நாவல்களைப் போல் இந்த நூலை படிக்கும்போதும் நாமும் மாயாஜால உலகில் பயணிப்பதுபோன்ற உணர்வை தருகிறது.
நன்றி: தினத்தந்தி, 4/9/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818