ஹோமோ டியஸ்
ஹோமோ டியஸ் – வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு – யுவால் நோவா ஹராரி; தமிழில்: நாகலட்சுமி சண்முகம்; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.494, விலை ரூ.499.
வரலாறு என்பதே இதற்கு முன் நடந்தவற்றைப் பற்றிக் கூறுவதாகத்தான் இருக்க முடியும். இந்நூல் நூலின் தலைப்புக்கேற்ப, இனிமேல் நடக்கப் போகின்றவற்றைப் பற்றி பேசுகிறது.
உலகமயம், தாராளமயம் உள்ள இக்காலத்தில், உலகின் பழைய கலாசாரம், மதம், சிந்தனை ஆகியவை அதற்கேற்ப மாற வேண்டியதன் தேவையை இந்நூல் வலியுறுத்துகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பம் அதனால் மாறி வருகிற வாழ்க்கைமுறை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றி வளர்ந்த சிந்தனைகளுக்குப் பொருத்தமாக இருக்க முடியாது என்று கூறுகிறது.
அதற்கு உலகில் தற்போது நடப்பிலுள்ள பலவற்றை ஆராய்கிறது.
விவசாயிகள் கோதுமையை வளர்ப்பது, தொழிலாளர்கள் ஆடைகளைத் தயாரிப்பது, வாடிக்கையாளர்கள் ரொட்டிகளையும் மேலாடைகளையும் வாங்குவது ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் பொருளாதாரம் என்று அப்பாவி மக்கள் நம்புகின்றனர். ஆனால் வல்லுநர்களோ, விருப்பங்களையும் திறன்களையும் பற்றிய தரவுகளைச் சேகரிப்பதற்கும், அந்தத் தரவுகளைத் தீர்மானங்களாக மாற்றுவதற்குமான ஓர் இயக்க அமைப்பாக பொருளாதாரத்தைப் பார்க்கின்றனர் என்று தற்போதைய பொருளாதாரநிலையைப் பற்றிக் கூறும் நூலாசிரியர், எனினும் தொழில்நுட்ப வளர்ச்சி ஒரேவிதமான சமுதாய அமைப்பையே உருவாக்கும் என்று கூற முடியாது என்கிறார்.
மனித குலத்தின் எதிர்காலம் குறித்த சிந்தனைகளை இந்நூல் தூண்டிவிடுகிறது.
நன்றி: 27/5/19, தினமணி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818