10/பிளஸ் 2 க்குப் பிறகு என்ன படிப்பு? என்ன வேலை வாய்ப்பு?
10/பிளஸ் 2 க்குப் பிறகு என்ன படிப்பு? என்ன வேலை வாய்ப்பு?, வடகரை செல்வராஜ் ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 500ரூ.
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்து முடித்த பிறகு என்ன வேலை வாய்ப்பைப் பெறலாம்? அல்லது அதற்கும் மேற்கொண்டு என்ன பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தால் எந்த விதமானவேலை வாய்ப்பைப் பெற முடியும்? என்பதற்கு முழுமையான வழிகாட்டியாக இந்த நூல் அமைந்து இருககிறது.
கல்வி முறையில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால், தொடர்ந்து எந்த வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என்பதை முடிவு செய்ய முடியாமல் தவிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இந்த நூல் வரப்பிரசாதமாசக அமைந்து இருக்கிறது என்று உறுதியாகக் கூறுலாம்.
மேல்நிலைப் படிப்பில் உள்ள பாடப்பிரிவுகள், தமிழகம் மற்றும் தேசிய அளவில் வழங்கப்படும் உதவித் தொகைத் திட்டங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகள், ஐ.டி.ஐ.மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகபள், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், வேலைவாய்ப்புகள் என்று அனைத்து தகவல்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளதால், அடுத்து என்ன படிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த நூல் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818