இளையராஜாவின் இசை பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள்
இளையராஜாவின் இசை பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள், மா.அமரேசன், அறம் பதிப்பகம், விலை 200ரூ.
பிரபல இசையமைப்பாளர் இளைய ராஜா இசையமைத்த திரைப்பட பாடல்களில் புத்த சமயக்கோட்பாடுகள் பிரதி பலிக்கின்றன என்பதை தனது ஆய்வுக் கட்டுரைகள் வாயிலாக விளக்கி இருக்கிறார் நூலாசிரியர் மா.அமரேசன். இதற்கு இளைய ராஜாவின் பூர்வ பவுத்த இசைக் கூறுகளே காரணம் என்றும் விவரிக்கிறார். ஜனனி ஜனனி, ஆயிரம் தாமரை மொட்டுக்களே, என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் உள்ளிட்ட 8 பாடல்களை ஆசிரியர் விரிவான முறையில் ஒப்பீடும் செய்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 28/11/18.