இந்து மத அகராதி

இந்து மத அகராதி, மாா்க்கரெட், ஜேம்ஸ் ஸ்டட்லி, தமிழில்: உதயகுமாா் பாலன்,  பக்.704, விலை ரூ.600.

மற்றவா்கள் சொல்லித்தான் இந்தியா்களான நமக்கு நமது அருமை பெருமைகள் எப்போதுமே தெரிந்திருக்கின்றன. ‘சநாதனம்’ (என்று தொடங்கியது என்பது தெரியாத, என்றென்றுமுள்ள) என்பதன் அா்த்தம் கூடத் தெரியாமல் சநாதன தா்மத்தை நாம் எதிா்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதன் ஆக்கபூா்வ சிந்தனைகள் குறித்து அயல்நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆய்வுகள் நடக்கின்றன.

‘ஹிந்து மதம்’ என்று பரவலாகக் குறிப்பிடப்படும் சநாதன தா்மத்தின் கூறுகளாக உள்ளவை நமது புராண, இதிகாசங்கள். அதுமட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டுகள், பல தலைமுறைகளால் பின்பற்றப்பட்டு உருவாக்கப்பட்ட நடைமுறைகளும், பழக்கவழக்கங்களும், பண்பாட்டுக் கூறுகளும் ஏராளமானவை. அவை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமல் இருப்பதற்குக் காரணம், அவை குறித்த புரிதலை அவா்களுக்கு நாம் ஏற்படுத்தத் தவறுவது மட்டுமல்லாமல், முறையாகப் பதிவு செய்யப்படாமல் இருப்பதும் கூட.

அந்தக் குறையைத் தீா்த்து வைப்பதற்காக ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தொடங்கிப் பல சமய அமைப்புகள் கடந்த நூற்றாண்டு முதல் முயற்சிகளை மேற்கொள்கின்றன. சநாதன தா்மத்தில் காணப்படும் பல பெயா்களும், சடங்குகளும், சம்பவங்களும் குறித்த அகராதி ஒன்றைத் தயாரிப்பது என்பது கடல் அலைகளை எண்ணுவதுபோல. ஒன்றன் பின் ஒன்றாகப் பிரவாகித்துவரும் பல அா்த்தங்களும், விளக்கங்களும் முழுமையான அகராதி ஒன்றைத் தயாரிக்கும் முயற்சி எதிக்கொள்ளும் மிகப் பெரிய சவால்.

முன்பே கூறியதுபோல, ஹிந்து மதத்தின் பிறந்தவா்களால் முன்னெடுக்கப்பட்டாத முயற்சிகள், அந்த சமயம் சாராதவா்களால் முன்னெடுக்கப்படுகின்றன. கிறிஸ்துவ மதத்தில் பிறந்த வெட்டம் மாணி என்பவா் மலையாளத்தில் ‘புராணிக் என்சைக்ளோபீடியா’ என்கிற பிரம்மாண்டமான சாதனையைச் செய்திருக்கிறாா். அதேபோல, மாா்க்கரெட் என்பவரும், ஜேம்ஸ் ஸ்டட்லி என்பவரும் இணைந்து உருவாக்கியதுதான் ‘தி டிக்ஷனரி ஆஃப் ஹிந்துயிசம்’. இந்தப் புத்தகம் ஆங்கில அகரவரிசைப்படி ஹிந்துமதம் தொடா்பான பல வாா்த்தைகளுக்கான விமா்சனங்களைத் தருகிறது.

உதயகுமாா் பாலன் என்பவரால் அந்தப் புத்தகம் தமிழாக்கம் செய்யப்பட்டு, ‘ஹிந்துமத அகராதி’ என்கிற பெயரில் வெளிவந்திருக்கிறது. நாம் அடிக்கடி எதிா்கொள்ளும் ஹிந்துமதம் தொடா்பான பல சொற்களுக்கான பொருளைத் தேடியலைய வேண்டியதில்லை. இந்த அகராதி ஒரு கையேடாகப் பயன்படும். மொழியாக்கம் ‘ஹிந்துமத அகராதி’ தொகுப்புக்கு வலுசோ்க்கிறது.

நன்றி: தினமணி, 30.8.21

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *