இந்தியா அழைக்கிறது

இந்தியா அழைக்கிறது, ஆங்கிலத்தில் ஆனந்தகிரிதாஸ், தமிழில் அருட்செல்வர் நா.மகாலிங்கம், மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு, பக். 360, விலை 300ரூ.

அமெரிக்க இந்திய பெற்றோருக்குப் பிறந்தவர் ஆசிரியர். தாய் பஞ்சாபி; தந்தை தமிழர். அவ்வப்போது பெற்றோரோடு இந்தியா வந்தவருக்கு, இந்திய மண் மணம் ஆசிரியரின் நெஞ்சை ஈர்க்கிறது. படிப்பு அமெரிக்காவிலும், பிழைப்பு இந்தியாவிலும் பரிணமிக்கிறது.

ஆசிரியரின் ஆதங்கங்கள், ஆசைகள், கொதிப்புகள், வார்த்தைக்கு வார்த்தை என மொழி பெயர்க்காமல் ஆசிரியரின் உணர்வுகளை ஊர்வலமாக்கியுள்ளார் மொழிபெயர்ப்பாளர். எத்தனை பாராட்டினாலும் தகும்.

தம் தாய் – தந்தையர், பாட்டி – தாத்தா, நண்பன் ரவீந்திரா, அம்பானி, முகேஷ் அம்பானி, கவிஞர்ஸ்ரீஸ்ரீ, வரவரராவ், வேணுகோபால், மார்க்ரெட், குடும்ப பிரச்னை தீர்க்கும் நீதிமன்றத்தில் பற்பல வழக்குகளின் பாத்திரங்கள், இப்படிச் சிலரைக் கொண்டு நுால் நகர்கிறது.

FRIEND என்பதற்கு F Frank, R Recovers, IInsults, EEmotions, NNosecuts, DDedications, SSentiments பக்.111 விளக்கமாகவும் MARRIAGE என்பதற்கு M Mutual Understanding, A Adjustment with each other, R Responsibility, R Reassurance to each other, I Importance to Family, A Acceptance, G Gettogether of two families, E Emotional bonding பக். 281 விளக்கமாகவும் காட்டுவது பொருத்தமாக உள்ளது.

ரவீந்திரா போன்றோரின் ஊக்கம், ஆக்கம், உழைப்பு தன் சமூகத்தை உயர்த்தப் பாடுபட்டதை நுால் நெடுக ஷோபாடே செய்தியாளர் வார்த்தையில், ‘வெளிநாடு சென்ற நம்பிள்ளைகள் இப்போது திரும்பிக் கொண்டிருக்கின்றனர்; காரணம், மேற்கில் விருந்து முடிந்து விட்டது…’ என்பது நுால் தலைப்பிற்கு இது பொருந்துகிறது.

நன்றி: தினமலர், 23/2/20.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *