இந்தியா பாகிஸ்தான் போர்கள்

இந்தியா பாகிஸ்தான் போர்கள், துவாரகை தலைவன், கிழக்கு பதிப்பகம், பக். 317, விலை 250ரூ.

பொது வாசகர்கள் விரும்பி வாசிக்கும்படி சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் வரலாற்று நூல்கள் தமிழில் மிக அரிதாகவே வெளிவருகின்றன. இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த யுத்தங்கள் குறித்த புத்தகம் வருவது வரவேற்கத்தக்கது.

மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டிய இரு நாடுகள் அல்லது இரு சமூகங்கள், நம்பவே முடியாத அளவுக்குப் பகை கொள்வது இந்தியா – பாகிஸ்தானுக்கு மட்டுமே உரித்தான விஷயமல்ல. இராக்-ஈரான், இன்றைய இஸ்ரேல் பகுதி போன்ற இடங்களிலும் நெடுங்காலமாகப் பகையும் சண்டையும் நிலவி வருகின்றன.

இன்றைய தமிழ் வாசகர்களுக்கு சுலபமாக கிடைத்துவிட முடியாத பல விவரங்களை சுவாரஸ்யமாகப் படிக்கும் விதத்தில் விறுவிறுப்பாக அளித்து இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. இந்தோ-பாக் யுத்தங்கள் பற்றிய புத்தகம் என்பது பெரிய லட்சியம்- அதில் சுமாரான வெற்றி பெற்றிருக்கிறார் ஆசிரியர்.

சில தவிர்த்திருக்கக் கூடிய குறைகள் – இடம், நபர் பெயர்களின் உச்சரிப்பு – “ராஜதரங்கிணி’யை இயற்றிய கல்ஹணரை “கல்ஹானா’ என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆதார நூல்கள் என்று குறிப்பிடப்பட்டவற்றைக் கொண்டு மட்டும் இந்தப் புத்தகத்தை எழுதிவிட முடியுமா? இவற்றையும் கடந்து விஷயங்களைத் தொகுத்து, சம்பவ விவரங்களோடு எழுதப்பட்ட விதத்தை ஆசிரியர் விளக்கியிருக்க வேண்டும்.

இந்நூலின் மிகப் பெரிய குறைகள்- ஒரு நல்ல முன்னுரையும், இன்றைய அளவில் இரு நாடுகள் இடையே ராஜதந்திர விவகாரங்களின் தொகுப்பாக ஒரு பின்னுரையும் இல்லாதது. சரித்திரப் புத்தகம் எழுதிவிட்டு ஒரு வரைபடம் கூட இல்லையே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *