இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை, டாக்டர் அபினவம் ராஜகோபாலன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.470.
மனிதனுக்கு முக்கியமானது எது. வாழ்க்கை வசதிகளா? மன நிம்மதியா? எல்லா வசதிகளும் படைத்தவர்கள் ஏதோ ஒன்று குறைவதாக கருதி கவலை அடைகின்றனர்.
எந்த கவலையும் இல்லாத சூழலே மன நிம்மதி. அந்த நிம்மதியை கார், பங்களா, பணம் போன்ற வசதிகள் பெற்றுத் தராது; ஆன்மிகம் மட்டுமே நிம்மதியை கொடுக்கும் என்பதை தெளிவுபடுத்தும் நுால் தான், இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
புத்தக அமைப்பும் புதுமையாக இருக்கிறது. குருவுடன் ஒரு வார ஆன்மிக பயணம் என்ற முறையில் படிப்படியாக ஆன்மிக நெறிமுறைகளை, பல உதாரணங்கள் மூலம் சிஷ்யர்களுக்கு விளக்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. படிக்கும்போது அந்த ஆன்மிகப் பயணத்தில் உடன் சென்றது போன்ற அனுபவம் கிடைக்கும்.
– இளங்கோவன்
நன்றி: தினமலர், 17/4/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818