இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986- 2016)
இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986- 2016), அ.மார்க்ஸ், அடையாளம், பக்.278, விலை ரூ.240.
1986 – ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி அரசின் புதிய கல்விக் கொள்கை முதல் 2016 – ஆம் ஆண்டின் பாஜக அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை வரை இந்தியக் கல்விமுறையில் என்ன என்ன மாறுதல்களைக் கொண்டு வர அவை முயன்றிருக்கின்றன என்று இந்நூல் ஆராய்கிறது.
நூலாசிரியர் கல்விக் கொள்கை தொடர்பாக, கடந்த 30 ஆண்டுகளாக எழுதிய நான்கு குறுநூல்கள்,சில கட்டுரைகள் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் amp;quot;கல்விச் சீர்திருத்தங்களுக்கான ஒரு கோட்பாடு அணுகல்முறை என்ற ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் இந்திய பெருமுதலாளிகளான முகேஷ் அம்பானியும், குமாரமங்கலம் பிர்லாவும். முழுக்க முழுக்க உயர்கல்வியைத் தனியார்மயமாக்கி வணிகப்படுத்துவதுதான் இந்த அறிக்கையின் பிரதானமான பரிந்துரை.
உலகமயமாகும் சூழலில் சந்தைப் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் அறிவுப் பொருளாதாரத்தை எவ்வாறு அமைப்பது என்பது குறித்து அந்த அறிக்கைப் பேசியது. கல்வியை முற்றிலும் அரசு கட்டுப்பாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்தியது. பல்கலைக்கழக வளாகங்களில் எல்லாவிதமான அரசியல் நடவடிக்கைகளும் தடை செய்யப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை கூறியது. கிட்டத்தட்ட இந்த அறிக்கையின் கண்ணோட்டத்தில்தான் ராஜீவ் காந்தியின் புதிய கல்விக் கொள்கை இருந்தது. பாஜக அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையும் இருக்கிறது என்பதை இந்நூல் விளக்குகிறது.
உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களுக்கு உகந்த வகையில் – பெரும் நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் – கல்வித் திட்டத்தை மாற்றுவதாக இந்த கல்விக் கொள்கைகள் இருக்கின்றன; அடித்தட்டு மக்கள் உயர்கல்வி கற்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என இந்நூல் விளக்குகிறது.
நன்றி: தினமணி, 24/12/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818