நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்
நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள், சு.தங்கவேலு, பூங்கொடி பதிப்பகம், விலை 150ரூ.
இது வரலாற்று நூல் என்றாலும், விறுவிறுப்பான நாவலைப் படிப்பது போன்ற அனுபவத்தைத் தரும் வகையில் துணுக்குத் தோரணமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சாதனை தடம் பதித்தவர்களின் வாழ்வில் நடைபெற்ற சுவாரசியமான, அதே சமயம் உயரிய வாழ்க்கைக்கு உரம் போட்ட நிகழ்வுகள் பற்றிய விவரங்கள், மின்னல் வேகத்தில் படித்துத் தெரிந்து கொள்வதற்கு வசதியாக சுருக்கமாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
பல தலைவர்கள் பற்றி இதுவரை அதிகம் கேள்விப்படாத தகவல்களும், நெஞ்சைத் தொடும் சம்பவங்களும் இதில் இடம் பிடித்துள்ளன. அன்றைய தலைவர்கள் பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களாக இவை அமைந்துள்ளன.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027649.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818