மிர்ஸா காலிப்
மிர்ஸா காலிப் (மொழிபெயர்ப்பில்) – துயரின் இதழ்களில் விரியும் புன்னகை, பாரஸீகத்திலிருந்து ஆங்கிலத்தில் மூஸா ராஜா, ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன், கவிதா பப்ளிகேஷன், பக்.264, விலை ரூ.275.
புகழ்பெற்ற உருது, பாரசீக மொழி கவிஞரான மிர்ஸா காலிப்பின் பாரசீக கவிதை நூலை மூஸா ராஜா ஆங்கிலத்தில் THE SMILE ON SORROW என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். அந்த ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து பல கவிதைகளை மொழிபெயர்ப்புத்துறையில் நிபுணத்துவம் பெற்ற லதா ராமகிருஷ்ணன் தமிழில் தந்திருக்கிறார்.
கவிஞர் மிர்ஸா அஸாதுல்லா கான் காலிப் 1797 – இல் பிறந்து 1869 – இல் மறைந்தவர். வாழ்க்கை, கடவுள், மனிதர்களுக்கிடையிலான உறவு, நம்பிக்கைகள், மாயைகள், காதல், அன்பு, அதிகாரப் போக்கு என அவரின் வாழ்க்கை குறித்த எண்ணங்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் 440 கவிதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன.
கவிதைகளை வாசிக்கும்போது இப்போது இருப்பது போல்தான் அப்போதும் இருந்ததா? என்ற வியப்பும், ஆழ்ந்த வருத்தமும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அதிகாரம் அறிவாற்றலை அறியாது; அறிவாற்றல் அதிகாரத்தைப் பொருட்படுத்தாது; உரைகல் பொன்னைக் கண்டெடுக்கவில்லை, தன்னை நிரூபிக்க எந்த உரைகல்லும் பொன்னுக்குத் தேவையில்லை என்ற அதிகாரம் பற்றிய கவிதையாகட்டும், ஒவ்வொரு துளியின் நிறைவும் கடலில் கரைவதே. இழப்பாகத் தோன்றலாம். ஆனால் முழுமையே அது என்ற தனிமனித வாழ்க்கைக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு குறித்த கவிதையாகட்டும் இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்தக் கூடியவையாக – உள்ளத்தைத் தொடுபவையாக இருக்கின்றன.
நன்றி: தினமணி, 31/12/18.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026099.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818