இந்திய மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் கையேடு
இந்திய மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் கையேடு, பதிப்பக வெளியீடு, யுனிவர்சல் கிங்டம் பப்ளிகேஷன்ஸ், விலைரூ.100
மாணவ – மாணவியர் படிப்புதவி என்ற, ‘ஸ்காலர்ஷிப்’ பெறுவதற்கான வழிகாட்டி நுால். ஞானசேகர், அப்பாவு மற்றும் பட்டய கணக்காளர் ஜான் மோரீஸ் தலைமையிலான குழு தயாரித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கல்வி உதவித்தொகைகள் என்பது உட்பட, 12 தலைப்புகளில் வழிகாட்டும் கட்டுரைகள் உள்ளன. உதவித்தொகை வழங்கும் அமைப்புகளின் அஞ்சல் முகவரி, இணையதள விபரத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரி, உயராய்வு மையங்களில் உலக அளவில் கிடைக்கும் படிப்பு உதவிகள், அதை வழங்கும் நிறுவனங்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. கல்வியில் முன்னேற துடிக்கும் மாணவியருக்கு, உலக அளவிலான வாய்ப்புகளை அறிமுகப்படுத்தும் கையேடு.
நன்றி: தினமலர், 10/5/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818