இரையாகும் இறையாண்மை

இரையாகும் இறையாண்மை (இந்திய – அமெரிக்க ராணுவ உறவுகள் 2014- 2017),  சு.அழகேஸ்வரன், வாஸ்வியா, பக்.56, விலை ரூ.40.

நரசிம்மராவ் காலத்திலிருந்து அமெரிக்காவுடனான இந்திய ராணுவ உறவுகளைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கும் நூல். 1995 இல் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதற்குப் பின்னர் பா.ஜ.க. அரசு 2001 ஆம் ஆண்டில் போர்த்தந்திரக் கூட்டாளிகள் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2005 இல் மன்மோகன் சிங் அரசாங்கம் இந்திய – அமெரிக்க பாதுகாப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2014 இல் இருந்து நவீன ஆயுத தளவாடங்களை அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாக உருவாக்குதல், விமானம் தாங்கிப் போர்க்கப்பல் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம், இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக போர் ஒத்திகை நடத்துதல், ரூ.13, 261 கோடி மதிப்பீட்டில் 100 ஆளில்லா போர் விமானங்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்ய முடிவெடுத்திருப்பது, கடல்வழி மற்றும் வான்வழி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது என அமெரிக்காவுடன் பல ராணுவ ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

உலக அளவில் தொழில், வர்த்தகரீதியாக அமெரிக்காவுடன், ஜப்பானுடன் போட்டிபோடும் நாடாக சீனா உள்ளது. சீனாவின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்காக, அமெரிக்கா பல்வேறு யுத்திகளைக் கையாண்டு வருகிறது. சீனாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்காக ஆசிய பகுதியில் தளங்களை உருவாக்கும் நோக்கத்துடன் அமெரிக்க செயல்படுகிறது. "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு என்ற திட்டத்தையும் அது வகுத்திருக்கிறது. அந்த செயல்பாட்டின் ஒருபகுதியாகவே அது இந்தியாவுடன் பல்வேறு ராணுவ ஒப்பந்தங்களைப் போட்டிருக்கிறது.

ஆசியாவை மறு சமன்படுத்துதல் என்ற அமெரிக்க நலன் சார்ந்த திட்டத்தில் இந்தியாவை இணைப்பதற்கான இந்த நடைமுறைகள், அமெரிக்கா சொன்னபடி கேட்கும் நாடாக இந்தியாவை மாற்றிவிடும். அது இந்திய இறையாண்மை அழித்துவிடும் என்று இந்நூல் எச்சரிக்கிறது.

நன்றி: தினமணி,23/7/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *