இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்
இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம், தமிழில் ரஷீத் ஹஜ்ஜுல், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 150ரூ.
இஸ்லாத்தின் தன்னிகரில்லாத கொள்கைகளையும், நடைமுறைகளையும் குர்ஆனும், நபிமொழியும் பேசுகின்றன. இஸ்லாத்தின் விஷயதானங்களை அவற்றின் இயல்புகளோடு உள் வாங்கி எளிமையாகவும், அறிவுபூர்வமாகவும் இஸ்லாமிய அழைப்பாளர்கள் முன்வைக்க வேண்டும். இதன் மூலம் குழப்பங்கள் தெளிவடையும். சந்தேகங்கள் நீங்கும்.
அன்பு, சகோதரத்துவம் வளரும், புரிந்துணர்வுகள் அதிகரிக்கும். இஸ்லாம் பற்றிய பிழையான புரிதல்கள் அகலும். இந்த அடிப்படையில், இஸ்லாமிய அழைப்பாளர்களின் அழைப்பு மொழியின் தரத்தை நெறிப்படுத்தும் வகையில் அற்புதமான வழிமுறைகளை அல்லாமா யூசுப் அல்கர்ழாவி, ‘பூமிப் பந்து ஒரு கிராமமாகி விட்ட நிலையில் நமது அழைப்பு மொழி’ என்ற தலைப்பில் அரபி மொழியில் எழுதினார்.
அந்த நூலைத் தமிழில் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அனைவரும் படிக்கும் வகையில் எளிமையாக மொழி பெயர்த்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 6/12/2017.