இதம் தரும் இதயம்
இதம் தரும் இதயம், க.மகுடமுடி, மகுடம் பதிப்பகம், பக்.254, விலை ரூ.350;
சாமானிய வாசகர்களுக்கு புரியும் அடிப்படை மருத்துவத் தகவல்களோடு இந்நூல் நின்றுவிடாமல் அறுவை சிகிச்சைகளின் அதி நவீன தொழில்நுட்பம் வரை எளிமையான மொழியில் இந்த நூல் விளக்குகிறது.
பொதுவாக இதுபோன்ற நூல்களில் மருத்துவக் கலைச் சொற்களும், தொழில்நுட்பரீதியிலான சொல்லாடல்களும் நிறைந்திருக்கும். ஆனால், இது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையாக எழுதப்பட்டு இருக்கிறது.
இதயத்தின் உள்வடிவமைப்பு எப்படி உள்ளது, அது எவ்வாறு செயல்படுகிறது என்ற அரிச்சுவடியுடன் நூல் தொடங்குகிறது. அதன் பின்னர், நாம் அன்றாடம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் இதயம் எந்த அளவுக்கு பலவீனமாகிறது என்பதையும், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் அதிகரித்தால் மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது என்பதையும் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.
உண்ணும் உணவில் தொடங்கி, உடல் பருமனால் ஏற்படும் விளைவுகள் வரையிலும், இதயம் சார்ந்த அனைத்து வகையான நோய்கள் குறித்தும், அதற்கான தற்காப்பு வழிமுறைகள் குறித்தும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. ஸ்டென்ட், ஆஞ்சியோ, பை பாஸ், ரத்த நாள சிகிச்சைகள் என அதி நவீன மருத்துவ சிகிச்சைகளின் நுட்பங்களும் விளக்கப்பட்டிருக்கின்றன.
இளைஞர்களுக்கு ஏற்படும் இதய நோய்களுக்கான காரணங்களும், தடுப்பு முறைகளும் கூறப்பட்டுள்ளன. வாசிப்பவர்களின் இதயங்களைத் தொடும் நூல்.
நன்றி: தினமணி, 7/3/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818