ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 330ரூ.
ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. கவிதை அதன் சிந்தனையின், அனுபவத்தின் ஆழத்தையே பலமாகக் கொண்டிருக்க வேண்டும். எதையும் பிரசாரம் செய்கிற மனோபாவம் கொண்டிருக்கக்கூடாது. குறிப்பாக நீதி போதனை அறவே கூடாது என்றெல்லாம் சொல்வார்கள்.
இதில் பிரான்சிஸ் பிரமாண்டமாகத் தனித்துத் தெரிகிறார். அவரது கவிதைகள் முழுமையான பயிற்சியால் காணக் கிடைப்பவை. அனுபவ உலகத்தை புறம், அகம் என இரண்டாகப் பிரிக்கும் கோடு அத்தனை தெளிவானது அல்ல. சமுத்திரமும், நிலமும் சந்திக்கும் கரை போன்றது அது.
தனித்தனி அனுபவங்களின் வெளியீடு அல்ல இக்கவிதைகள். ஒரே நீண்ட அனுபவச் சங்கிலியின் வெவ்வேறு கண்ணிகள். அவரது மொழி ஆரவாரமற்றது. வெளிப்பாட்டுக்குத் தகுந்த அளவு கைக்கொள்ளப்படுவது. அனுபவம், வெளிப்பாடு இரண்டும் தீவிரமடைகிறபோது மொழியும் தீவிரமடைகிறது. கிருபாவின் கவிதைகள் அவ்வண்ணமே.
நன்றி: குங்குமம், 11/11/2016.