சோதிடத்தில் பலன் காணும் முறை

சோதிடத்தில் பலன் காணும் முறை, இளங்கோவன், குருவருள் சோதிட ஆய்வு மையம், பக்.72, விலை ரூ. 100.

ஒரு ஜாதகத்தை கையிலெடுக்கும் ஜோதிடர், அடிப்படையில் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், எத்தகைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

லக்கினத்தின் முக்கியத்துவம், பாவங்கள், அந்த பாவங்களை ஆளும் கிரகங்களின் காரகத்துவங்கள், அதில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் செயல்பாடுகள், பாவங்களைக் கண்டு ஜாதகங்களை ஆராயும் திறன் போன்றவற்றை அக்கறையுடன் எடுத்துக் கூறி எளிமையான உதாரணங்களுடன் இந்நூலைப் படைத்திருக்கிறார் இந்நூலாசிரியர்.

கிரகங்களுக்குரிய நட்பு, பகை கிரகங்கள், அவை தரும் நன்மை தீமைகள், குடும்பம், படிப்பு, உடன்பிறந்தவர்கள், தாய், சுக போகங்கள், பூர்வபுண்ணியம், புத்திர பாக்கியம், கடன், நோய், திருமணம், கூட்டுத்தொழில், ஆயுள், தந்தை, பாக்கியங்கள், வேலை வாய்ப்பு, தொழில், கிடைக்கும் லாபங்கள், தாம்பத்தியம், வெளிநாட்டுப் பயணம் என அனைத்தையும் எளிமையாக அறிந்து கொள்ளும் பொருட்டு செய்யப்பட்டுள்ள இந்த ஜோதிட ஆராய்ச்சி நூல், ஜோதிடம் கற்க விரும்புவோர்க்கு மிகவும் பயன் தருவதாக அமையும்.

நன்றி: தினமணி, 19/6/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *