அப்துல்கலாம் – ஒரு கனவின் வரலாறு
அப்துல்கலாம் – ஒரு கனவின் வரலாறு, சேவியர், அருவி வெளியீடு, விலை 250ரூ.
‘ஏவுகணை மனிதர்’ ‘மக்கள் ஜனாதிபதி’ ‘மாணவர்களின் நண்பன்’ ‘அணு விஞ்ஞானி’ போன்ற அடைமொழிகளால் அடைகாக்கப்பட்டவர் அப்துல் கலாம். அப்துல்கலாமுடைய புகழுக்கும் பெருமைக்கும் அவரது எளிமையும், பணிவும் நேர்மையுமே காரணம்.
இந்தப் பண்புதான் அவரை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வழிகாட்டியாக மாற்றியது. இன்றைய தலைமுறையும், அடுத்த தலைமுறையும் கலாமிடம் இருந்து எதைக் கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ இந்த மூன்று பண்புகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத்தாஒர் சேவியர் இந்த நூலை எழுதியுள்ளார்.
அப்துல் கலாம் பற்றி இதுவரை எண்ணற்ற நூல்கள் வெளிவந்துள்ளன. இருந்தாலும் அவரது பண்புகளை முன்னிலைப்படுத்துவதே முக்கியமானது என்று முன்னுரையில் ஆசிரியர் சொல்லி இருப்பதை தனது அழகு தமிழ் நடையால் நடைமுறைப்படுத்தி இருக்கிறார். கலாம் ஒரு கலங்கரை விளக்கு, அவரது வரலாற்றையும் குணாதிசயங்களையும் எளிய நடையில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 31/8/2016.