அப்துல்கலாம் – ஒரு கனவின் வரலாறு

அப்துல்கலாம் – ஒரு கனவின் வரலாறு, சேவியர், அருவி வெளியீடு, விலை 250ரூ. ‘ஏவுகணை மனிதர்’ ‘மக்கள் ஜனாதிபதி’ ‘மாணவர்களின் நண்பன்’ ‘அணு விஞ்ஞானி’ போன்ற அடைமொழிகளால் அடைகாக்கப்பட்டவர் அப்துல் கலாம். அப்துல்கலாமுடைய புகழுக்கும் பெருமைக்கும் அவரது எளிமையும், பணிவும் நேர்மையுமே காரணம். இந்தப் பண்புதான் அவரை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வழிகாட்டியாக மாற்றியது. இன்றைய தலைமுறையும், அடுத்த தலைமுறையும் கலாமிடம் இருந்து எதைக் கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ இந்த மூன்று பண்புகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத்தாஒர் சேவியர் இந்த நூலை […]

Read more

தேவனின் திருப்பாடல்கள்

தேவனின் திருப்பாடல்கள், நாஞ்சில் மு.ஞா.செ. இன்பா, அருவி வெளியீடு, விலை 400ரூ. விவிலியத்தில் தாவீது மன்னன் பாடியதாகச் சொல்லப்படும் சங்கீத பாகத்தை மூலமாகக் கொண்டு இக்கவிதைத் தொகுப்பு எழுதப்பட்டுள்ளது. விவிலியம் தோன்றிய காலத்தில் இருந்து இப்படியோர் கவிதைத் தொகுப்பு உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி, இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் போன்ற இசை அமைப்பதற்கு ஏற்றவாறு பாடல்களை இயற்றியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 5/10/2015.   —- கம்பரும் வால்மீகியும், அரிசோனா மகாதேவன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. பாரதநாட்டின் […]

Read more

தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்

தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும், அருள் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழர்களுடைய வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும், கலாச்சாரப் புதையலாகவும் திகழும் ஒப்பற்ற சிலம்பக் கலைகளின் நுணுக்கங்களையும், வரலாற்றினையும் பற்றி தொகுக்கப்பட்ட நூல். இந்நூலின் முதற்பகுதியில் சிலம்பத்தைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும், இரண்டாம் பகுதியில் சிலம்பம் செயல்முறைப் பயிற்சிகளையும், சிலம்பிக் கம்பின் பகுதியையும், சிலம்பம் விளையாடுவோர்செய்ய வேண்டிய பயிற்சியையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் அ. அருணாசலம். நன்றி: தினத்தந்தி, 23/9/2015.   —- தேவனின் திருப்பாடல்கள், அருவி வெளியீடு, விலை 400ரூ. […]

Read more

காமராஜர் ஒரு சகாப்தம்

காமராஜர் ஒரு சகாப்தம், க. தாமோதரன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 217, விலை 130ரூ. 2011-2012ம் ஆண்டிற்கான, தமிழக அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய பணிக்கான அமைப்பின், நிதி உதவி பெற்று வெளியிடப்பட்டுள்ளது, இந்த நூல்.  1903 முதல் 1975 வரை வாழ்ந்த காமராசரைப் பற்றி, 15 தலைப்புகளில் விவரித்துள்ளார் ஆசிரியர். அவரது அரசியல் வாழ்க்கையில் மிகவும் பிரபலமானது காமராஜர் திட்டம். அது பற்றியும் முழுமையாக சொல்லப்பட்டிருக்கிறது. (அதாவது மூத்த தலைவர்கள் தாம் வகிக்கும் பதவியிலிருந்து விலகி கட்சிப் பணிகளை […]

Read more