காமராஜர் ஒரு சகாப்தம்
காமராஜர் ஒரு சகாப்தம், க. தாமோதரன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 217, விலை 130ரூ.
2011-2012ம் ஆண்டிற்கான, தமிழக அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய பணிக்கான அமைப்பின், நிதி உதவி பெற்று வெளியிடப்பட்டுள்ளது, இந்த நூல். 1903 முதல் 1975 வரை வாழ்ந்த காமராசரைப் பற்றி, 15 தலைப்புகளில் விவரித்துள்ளார் ஆசிரியர். அவரது அரசியல் வாழ்க்கையில் மிகவும் பிரபலமானது காமராஜர் திட்டம். அது பற்றியும் முழுமையாக சொல்லப்பட்டிருக்கிறது. (அதாவது மூத்த தலைவர்கள் தாம் வகிக்கும் பதவியிலிருந்து விலகி கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதுதான் காமராஜர் திட்டம்). நல்ல நூல். -ஸ்ரீநிவாஸ் பிரபு.
—-
ஆரோக்கிய ரகசியம் (யோக ஆசனம்), குமாரசுவாமி, அருவி வெளியீடு, பக். 400, விலை 200ரூ.
மேல் நாட்டவர்களே நமது யோகாசனங்களின் மகிமையை உணர்ந்து, பல வியாதிகளுக்க நிரந்தரத் தீர்வு அவையே என்று தீர்மானித்து, யோகாசனங்களை முறையாகப் பயின்று வரும் காலம் இது. ஏறத்தாழ 25 யோகாசனங்கள், அவற்றைச் செய்யும் முறைகள், அதனால் அடையக்கூடிய நற்பலன்கள் என்று மிக விரிவாக எல்லோரும் புரிந்துகொண்டு பின்பற்றும் விதத்தில் எழுதியிருக்கிறார். இருந்தாலும் யோகாசனங்களை, புத்தக வாயிலாக பின்பற்றுவது பாதுகாப்பானது அல்ல. -மயிலை சிவா. நன்றி: தினமலர் 17/11/13.