நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம், இராம. கோபாலன், விஜயபாரதம் பதிப்பகம், 12, எம்.வி. நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 31, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-490-8.html

அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பேசவோ எழுதவோ முடியாது. அதன் அடக்குமுறைகளை ஏற்று இணங்கி நடக்க வேண்டும். மீறுபவர்கள் மிசா, டி.ஐ.ஆர, ஆகியவற்றின் கீழ் சிறையிலடைக்கப்பட்டு, துன்புறுத்தப்படுவர். அவசரச் சட்டத்தின் மூலம் பிரகடனப்படுத்தப்படும் இந்த நிலையை, நெருக்கடி நிலையாகும். நம் நாட்டின் இன்றைய தலைமுறையினருக்கு இதன் பாதிப்பு எத்தகையது என்பது தெரியாது. அன்னிய ஆட்சியை எதிர்த்து எப்படி விடுதலை போராட்டம் நடந்ததோ, அதேபோல் இந்திராகாந்தி ஆட்சியின் போது (1975 ஜுன் 25) அமலான இந்த நெருக்கடி நிலையை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும், பத்திரிகைகளும், அறிவூஜீவிகளும், ஆர்.எஸ்.எஸ், ஆனந்த மார்க்கம், ஜமாத் ஏ இஸ்லாமி போன்ற பல்வேறு சமூக அக்கறை கொண்ட இயக்கங்களும் போராடின. பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பல பத்திரிகைகள் தடை செய்யப்பட்டன. தமிழகத்தில் தினமணி, துக்ளக் போன்ற பத்திரிகைகள் அடக்குமுறைக்கு ஆளாகின. இந்திரா காந்தியின் இந்த சர்வாதிகாரத்தை போராட்டக்காரர்கள் எப்படி எதிர்கொண்டனர். இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவிட அவர்கள் கையாண்ட ரகசிய வழிமுறை, இதில் கம்யூனிஸ்ட்கள், தி.மு.க. போன்ற கட்சிகளின் நிலை, குறிப்பாக இதில் ஆர்.எஸ்.எஸ். ஆற்றிய பங்கு, அதற்காக அவர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்கள் என்று பல விவரங்கள் சுமார் 300 பக்கங்களுக்கு மேல் இந்நூலில் புள்ளி விவரத்தோடு தொகுக்கப்பட்டுள்ளன. 1978ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இந்நூல், 35 வருடங்களுக்குப் பின் மீண்டும் வெளியாகியுள்ளது. -பரக்கத். நன்றி; துக்ளக், 9/10/13.    

—–

  மனதோடுதான் நான் பேசுவேன், எஸ். முத்துராமன், சந்தனத் தென்றல், 105, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை 59, விலை 60ரூ.

சமுதாய அவலங்கள், சீர்கேடுகள், பிரச்சினைகள் குறித்து மனதுக்குள் குமுறுபவர்கள் பலர். அவற்றைப் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்துபவர்கள் சிலர். அந்த சிலரில் ஒருவர்தான் இந்நூலாசிரியர் எஸ். முத்துராமன். ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அன்றாடம் எதிர்கொள்ளும் விஷயங்கள், பிரச்சினைகளை இந்நூலில் பேசியிருக்கிறார் இவர். நடுநிலையில் நின்று பிரச்சினைகளை அலசுவதோடு அவற்றுக்கான தீர்வுகளையும் கூறியிருப்பது பாராட்டுக்குரியது. நன்றி: தினத்தந்தி, 7/8/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *