இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பதிப்பகம், 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 400, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-4.html

வெங்காயத்தில் இருந்து வெடிகுண்டுவரை இந்த நூல் அனைத்து விஷயங்களையும் பேசும் எனக்குறிப்பிட்டிருப்பதுபோல், பல துறைகளைச் சேர்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். பொதுக் கட்டுரைகள், தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம், அரசியல் – சமூகம், நாடகம் என ஆசிரியர் சில தலைப்புகளில் கட்டுரைகளைப் பிரித்துத் தந்துள்ளார். அமெரிக்க சந்தையை ஒரு கட்டுரை காட்டும் என்றால், இன்னொன்று ஆழ்வார்களின் அமுதத் தமிழை வெளிச்சமிடுகிறது. மார்க்சியத்தைப் புதுப்பிக்க வேண்டும், ஆரிய திராவிடப் பிரச்னை, சமஸ்கிருதம், உள்நாட்டில் தமிபக்கு மதிப்பில்லாதது ஏன்?, தொன்மைத் தமிழும் நவீனத் தமிழும், தமிழ்நாட்டில் பக்தி இயக்கம், களவியல், கற்பியல், பெண்ணியம் என பல்வேறு தலைப்புகளில் சமூகச் சிந்தனைகளை முன் வைக்கிறார் இந்திரா பார்த்தசாரதி. சங்கத்தில் கலகக் கவிதை என்ற கட்டுரையில், புறநானூற்றுக் கவிதையை அலசுகிறார். கற்பில் காணும் பண்பாட்டு அரசியல் கட்டுரையில், அற்ப விஷயங்களையும் அரசியலாக்கும் தமிழ்நாட்டுப் போலிப் பண்பாட்டு அரசியல்வாதிகளின் வாயில் அகப்பட்டு அவதியுறும் சொல் கற்பு. கற்பிக்கப்படுவது எதுவோ அது கற்பு. கல்வியினால் உண்டாகும் ஞானமும் கற்புதான் என்கிறார். காரல் மார்க்ஸும் வால் ஸ்ட்ரீட் வீழ்ச்சியும் என்ற கட்டுரையில், பொருளாதாரமும் அரசியல் கொள்கைகளும் அலசப்படுகின்றன. பரந்த அறிவை இந்த நூல் வாசகனுக்குத் தருவது உண்மை. நன்றி: தினமணி, 30/9/13.  

—-

 

உயிரினச் சூழலும் சரணாலயங்களும், முனைவர் பா. ராம் மனோகர், நவமூகாம்பிகை.

பார்த்து, ரசித்து, லயித்து அனுபவிக்கக்கூடிய ஒன்று இயற்கை சூழலில் காணப்படும் உயிரினங்களும் அவற்றின் சரணாலயங்களும், இயற்கை ஆர்வலர்கள், குறிப்பாக மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளும்வகையில், பூச்சிகளை உண்ணும் ஆகிய மூஞ்சுறு, அழிவின் பிடியில் சிக்கி உள்ள புருவக்கொம்பு மான், வளைதோண்டும் தவளைகள் போன்ற உயிரினங்கள் பற்றியும், புலிக்காடு, ரங்கன் திட்டு, கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் மற்றும் பந்திப்பூர், சரிஸ்கா வனவிலங்கு புகலிடங்கள் குறித்தும் அலையாத்திக் காடுகளின் சூழல் மீட்பு முயற்சி, வனவள ஆய்வில் தொலை உணர்விகள் 21ம் நூற்றாண்டில் எதிர்கால கல்வி ஆகியவை பற்றியும், சுவையான தகவல்களுடன், 136 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த புத்தகத்தை, சென்னை செங்குன்றம் முழுநேர நூலகத்தில் படித்துப் பயன்பெறலாம். நன்றி: தினமலர் 17/11/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *