தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்
தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும், அருள் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
தமிழர்களுடைய வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும், கலாச்சாரப் புதையலாகவும் திகழும் ஒப்பற்ற சிலம்பக் கலைகளின் நுணுக்கங்களையும், வரலாற்றினையும் பற்றி தொகுக்கப்பட்ட நூல். இந்நூலின் முதற்பகுதியில் சிலம்பத்தைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும், இரண்டாம் பகுதியில் சிலம்பம் செயல்முறைப் பயிற்சிகளையும், சிலம்பிக் கம்பின் பகுதியையும், சிலம்பம் விளையாடுவோர்செய்ய வேண்டிய பயிற்சியையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் அ. அருணாசலம். நன்றி: தினத்தந்தி, 23/9/2015.
—-
தேவனின் திருப்பாடல்கள், அருவி வெளியீடு, விலை 400ரூ.
விவிலியத்தில் தாவீது மன்னன் பாடியதாகச் சொல்லப்படும் சங்கீதங்களை மூலமாகக் கொண்டு இந்தக் கவிதைத் தொகுப்பை நாஞ்சில் மு.ஞா.செ. இன்பா எழுதியுள்ளார். இசை அமைப்பதற்கு ஏற்றவாறு இதில் உள்ள பாடல்கள் அமைந்துள்ளன. சினிமா கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ் வழங்கிய அணிந்துரையில் இந்த நூல் ஓர் இசைக் காவியம் என்று பாடியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/9/2015.