ஹாலிவுட் பிரபலங்கள்

ஹாலிவுட் பிரபலங்கள், ஆர். மணவாளன், கண்ணம்மா பதிப்பகம், புதுச்சேரி, பக். 160, விலை 120ரூ.

சுமார் 120 ஆண்டு கால சினிமாவின் சரித்திரத்தில் சாதனைகள் படைத்த நடிகர் நடிகையரைப் பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறார் ஆர். மணவாளன். நடிகர் நடிகையர் மட்டுமின்றி, தயாரிப்பாளர் வால்ட் டிஸ்னி, ஜேம்ஸ் பாண்ட் டபிள் ஓ செவன் பாத்திரத்தை மையமாக வைத்து கதைகளை எழுதிய இயான் ஃபிளமிங், இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் பாடகரான மைக்கேல் ஜாக்ஸன் போன்றவர்களைப் பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கின்றன . ஹாலிவுட்டைச் சேர்ந்த கலைஞர்கள் மட்டுமின்றி, புரூஸ் லீ, ஜாக்கி சான் போன்ற ஆசியாவைச் சேர்ந்த நடிகர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. இன்று உலகெங்கும் பிரபலமாக இருக்கும் ஹாலிவுட் என்ற இடம் எப்படி உருவானது என்பதில் தொடங்கி, அங்கு ஸ்டுடியோக்கள் அமைக்கப்பட்டது, படத்தயாரிப்பு வளர்ந்தது என்று ஆரம்ப கால சினிமா வரலாறும் சுருக்கமாக முதல் சில அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது. ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோவின் நடிப்பையும் ஸ்டைலையும் சிவாஜி கணேசனம், ஹாலிவுட் நடிகர் எர்ரால் ஃபிளைனை எம்.ஜி.ஆரும் பின்பற்றினார்கள் என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர். மனதளவில் கம்யூனிசச் சித்தாந்ததைக் கொண்ட சார்லி சாப்ளினை லெனின் சந்திக்க விரும்பியிருக்கிறார் என்ற செய்தி வியப்பளிக்கிறது. நன்றி: தினமணி, 17/8/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *