காலமெல்லாம் கண்ணதாசன்
காலமெல்லாம் கண்ணதாசன், ஆர்.சி.மதிராஜ், தமிழ் திசை பதிப்பகம், விலை 130ரூ.

திரைப்படக் கவிஞர்கள் தாங்கள் படித்தவற்றையும் கேட்டவற்றையும் தங்கள் சிந்தனைக் கேற்ப பாடலாக வடித்தார்கள். அது நம் மூளையைத் தொட்டது. ஆனால் கண்ணதாசன் தம் அனுபவங்களைப் பாடலாக்கிக் கொடுத்தார். அது நம் இதயத்தைத் தொட்டது.
வாழ்க்கைக்குப் பல படிப்பினைகளைக் கொடுத்தது. அதனால் கண்ணதாசன் பாடல்கள் காலம் கடந்து நிற்கிறது’ என்ற பாடலாசிரியர் முத்து லிங்கம் முன்னுரையுடன் துவங்குகிறது, இந்நுால்.
கண்ணதாசன் பாடல்களைத்தான் காலம் முழுக்க எல்லாரும் எழுதி, சிலாகித்து, கொண்டாடி விட்டார்களே, இவர் புதிதாக என்ன எழுதிவிடப் போகிறார், என்று யாரேனும் நினைத்தால், அந்த சிந்தனை முற்றிலும் தவறு என்று நிரூபிக்கிறது இந்நுால்.
தன் சிறப்பான சிந்தனை, கற்பனை வளத்தால் நுாலாசிரியர் பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் தரும் விளக்கம் நிறைவைத் தருகிறது. கண்ண தாசன் பாடல்கள் வழியே இன்றைய சமூகத்தில் நிகழும் அவலங்களையும் தொட்டிருக்கிறார், நுாலாசிரியர் மதிராஜ்.
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் வரும், ‘எங்கிருந்தாலும் வாழ்க…’ என்ற பாடலுக்கு தரும் விளக்கம் இன்றைய காதலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. இப்படி நுால் முழுக்கவும் 30 பாடல்களுக்கு வெவ்வேறு சிந்தனைகள், விளக்கங்கள் தரப்பட்டு உள்ளன.
– சூர்யா
நன்றி: தினமலர், 10/2/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027960.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818