கந்த புராணம்
கந்த புராணம், வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், விலைரூ.150
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட கந்த புராணத்தை உரைநடையாக, 43 அத்தியாயங்களில் வழங்கும் நுால்.
கம்ப ராமாயணத்தைப் போல் ஆறு காண்டங்களைக் கொண்ட கந்த புராணத்தை, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளினார். அவருக்கு முருகப் பெருமானே அடி எடுத்துக் கொடுத்ததுடன், இலக்கணத் தெளிவையும் வழங்கினார் என்பது புராணம். அந்த வரலாற்றை விரிவாகத் தெரிவித்திருப்பதுடன், கந்த புராணச் செய்திகள் அனைத்தையும் எளிய மொழி நடையில் தெரிவிக்கிறது.
வள்ளி திருமணத்துடன் நிறைவடையும் கந்த புராணத்தைத் திருத்தணி என்னும் திருத்தலத்துடன் நிறைவு செய்திருப்பதுடன், முருகனின் பல்வேறு பெயர்களையும், விரதங்களையும் தொகுத்துத் தந்துள்ளார் வேணு சீனிவாசன். ஆண்டு கணக்காகப் படிக்க வேண்டிய கந்த புராணத்தை, ஒரு மணி நேரத்தில் படித்து முடிக்கும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது.
– முகிலை ராசபாண்டியன்
நன்றி: தினமலர், 10/1/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030971_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818