கந்தன் கதை
கந்தன் கதை, இரவிக்குமார், அவனருளாலே பதிப்பகம், விலை 450ரூ
கந்தபுராணம் என்ற பெயரைக் கேட்டவுடன், புராணம் எல்லாம் நமக்கு எதற்கு என்று தள்ளிவிடும் இளைய தலைமுறையினரும், கந்தனின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், இந்தப் புத்தகம், நாவல் வடிவத்தில் எழுதப்பட்டு இருக்கிறது.
கந்தபுராணத்தில் விடுபட்டுப் போன பக்கங்களைக் கற்பனை கலந்து, அவற்றை கந்தபுராணத்துடன் இணைத்து இந்த நாவலை ஆசிரியர் உருவாக்கி இருக்கிறார். இந்த நாவலில் ஆனமீகக் கருத்துகளை சொல்வதோடு, அவற்றை நடைமுறை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு, சம்பவங்களைச் சொல்லி இருப்பதால் படிக்க ருசிகரமாக இருக்கிறது.
சூரனுக்கு சிவன் வரம் தருவது, தன் மீது மலர் அம்பு வீசிய காமனை சிவன் எரிப்பது, அகத்திய முனிவரின் தமிழகம் வருகை, சரவணப் பொய்கையில் முருகன் அவதாரம், இறுதியில் சூரன் வதம் செய்யப்படுவது ஆகிய அனைத்தும் இந்த நாவலில் இடம்பெற்றுள்ளன. புராணத்தில் உள்ள நிகழ்வுகளைக் கதை ரூபத்தில் தந்து இருப்பது புதிய முயற்சி.
நன்றி: தினத்தந்தி, 18/12/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818