கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்
கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும், தா. பாண்டியன், என்.சி.பி.எச். வெளியீடு, விலை 140ரூ.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான தா.பாண்டியன், ‘கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் மார்க்ஸின் வாழ்க்கையைக் கூறும் அதே நேரம், இந்தியா குறித்து மார்க்ஸ் கூறிய முக்கிய பகுதிகளைப் பற்றியும் விவரிக்கிறது.
இந்தியாவின் வறுமை குறித்து ஆராய்ந்த தாதாபாய் நௌரோஜியும் மார்க்ஸும் பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகத்தில் அடுத்தடுத்த அறைகளில் ஒரே பிரச்சினையின் வெவ்வேறு பரிமாணங்கள் பற்றி பல ஆண்டுகளுக்கு ஆராய்ந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. சோஷலிச – சமதர்மச் சிந்தனைகள் திருக்குறளில் அறச்சிந்தனையாக வெளியிடப்பட்டுள்ளன.
அதைப் பற்றி நாம் ஏன் பேசுவதில்லை என்று கேட்டு, விரிவான எடுத்துக்காட்டுகளோடு ஆசிரியர் விளக்கியுள்ளார். மார்க்ஸியம் நம் மண்ணுக்குப் புதுமையானதோ, அந்நியமானதோ அல்ல என்பதே அவரது வாதம். அந்த வகையில் இந்த நூல் வெறும் வாழ்க்கை வரலாறாக இல்லாமல், நமக்கும் மார்க்ஸ் மார்க்ஸியத்துக்கும் இடையே உள்ள தொடர்பாக விரிந்துள்ளது.
– ஆதி வள்ளியப்பன்,
நன்றி: தி இந்து, 5/5/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026249.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818