கர்ம வினைகள் நீக்கும் கால பைரவ ரகசியம்

கர்ம வினைகள் நீக்கும் கால பைரவ ரகசியம், ஜெகதா, சங்கர் பதிப்பகம், விலைரூ.260.

கால பைரவரின் புராணத்தில் துவங்கி, பைரவர் சிறப்புகளையும் வழிபாட்டு முறைகளையும் கூறி, பைரவ வழிபாட்டால் கிட்டும் பலன்கள், தமிழகத்திலுள்ள பைரவர் தலங்கள், பைரவர் சஷ்டி கவசம், அஷ்ட பைரவர் அவதாரங்கள், பைரவர் ஆற்றல்கள், பிரபஞ்ச ரகசியம், நட்சத்திர கோவில்கள் போன்ற பல தகவல்கள் தொகுக்கப்பட்ட நுால்.

சனி பகவானுக்குக் குரு என்பதாகக் கூறி, ஒவ்வொரு ராசிக்காரரும் முறைமையோடு வழிபாடு செய்ய வேண்டிய கிழமைகள் தரப்பட்டுள்ளன. பைரவர் விரதம் மேற்கொள்ள வேண்டிய நாட்கள், மனதில் உறுதிமொழிகள் ஏற்று விரத நிறைவு செய்யும் முறை, இலுப்பை எண்ணெய் விளக்கேற்றும் முறைமை போன்றவற்றை கூறிப் பஞ்சதீப விளக்கு பற்றிய விபரமும் தரப்பட்டுள்ளது. வழிபாட்டு முறைமைகளோடு தல விபரங்களை முன்வைக்கும் நுால்.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

நன்றி: தினமலர், 9/1/21.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031469_-16/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *