கவனக் குறைவுகளும் அவற்றின் தீர்வுகளும்

கவனக் குறைவுகளும் அவற்றின் தீர்வுகளும், டாக்டர் எம்.பிர்லா பவளம், மணிமேகலைப் பிரசுரம், பக். 192, விலை 160ரூ.

மனிதனின் வாழ்க்கையில் கவனம் பெறும் இடத்தைக் கவன வேல் என்னும் தலைப்பில் நுணுக்கமாக ஆய்ந்துள்ள நூல். தலைப்பின் ஆழத்தையும் அகலத்தையும் கனமாக்காமல் எளிமையாக உணர்த்துவதற்கு இசையைத் துணைக்கு அழைத்துள்ளார்.

எம்.எல்.வசந்தகுமாரி, பி.சுசீலா, இளையராஜா, எம்.எஸ். சுப்புலட்சுமி என்று பல இசைக் கலைஞர்களின் இசை லயத்தை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். மூன்று பாகங்களாகப் பகுத்து அவற்றில் பதினொரு அத்தியாயங்களை வகுத்துத் தந்துள்ளார்.

மருத்துவ ஆர்வலர்களை நிச்சயம் கவரும். ஆங்கிலத்தில் மருத்துவக் கல்வி படித்தவர்கள், தமிழில் எழுதும்போது ஏற்படும் தடுமாற்றம் எதுவும் இன்றி எளிய நடையில் அமைந்துள்ளது. எல்லா வீட்டிலும், பொது நூலகங்களிலும் இருக்க வேண்டிய நூல்.

-முகிலை ராசபாண்டியன்.

நன்றி: தினமலர், 13/9/2020.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *