காவிரி நேற்று இன்று நாளை
காவிரி நேற்று இன்று நாளை, பெ. மணியரசன், பண்மைவெளி பதிப்பகம், பக். 208, விலை 120ரூ.
வரலாற்றுக் காலத்திலிருந்து இன்று வரை காவிரிக்கும், தமிழர்களுக்கும் உள்ள உறவு, கர்நாடகம் காவிரியைத் தடுக்கின்ற நிகழ்வுகள், ஒப்பந்தங்கள், தீர்ப்பாய, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், தமிழகத்தின் காவிரி உரிமை குறித்த இந்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
காவிரி பிரச்னை ஆரம்பித்த நாளிலிருந்து, 2016 டிசம்பர் வரை காவிரி சிக்கலில் நடந்த நிகழ்வுகள், வழக்குகள், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுடன், தண்ணீர் தகராறுச் சட்டம், தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு ஆகிய பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
காவிரி பற்றி கவலைப்படும், பேசும், போராடும் ஒவ்வொரு தமிழருக்கும் பயன்படும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர், 17/1/2017.