கேள்வி? பதிலில்! முதியோர் நல மருத்துவம்
கேள்வி? பதிலில்! முதியோர் நல மருத்துவம், டாக்டர் வி.எஸ்.நடராஜன், வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, விலைரூ.120.
முதியோர் நலத்தில் அக்கறையுடன் எழுதப்பட்டுள்ள நுால். வயது முதிரும் போது ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை எளிய நடையில் கேள்வி பதில் பாணியில் விளக்குகிறது.
இந்த நுாலில், 22 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதய நலம், நீரிழிவு நோய், மூட்டு எலும்புகளின் நலம் என உடல் உறுப்புகளை தனித்தனியே சுட்டி, அவற்றை பேணும் வழிமுறைகளை எழுதியுள்ளார். முதுமை பருவத்தை மகிழ்ச்சியாக கழிக்கும் வகையில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது.
இறுதியாக, ஓர் உறுதிமொழி என்ற தலைப்பு உள்ளது. அதில் முதுமை ஏற்படும் போது, மன ரீதியாக தயாராக வேண்டிய பொன்மொழிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை கடைப்பிடித்தால், முதுமை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்கலாம். முதியோர் நலனில் அக்கறை கொண்டு எழுதப்பட்டுள்ள நுால்.
– அமுதன்
நன்றி: தினமலர், 6/3/22
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818