கோமணம்

கோமணம், சுப்ரபாரதி மணியன், முன்னேற்றப் பதிப்பகம், பக். 112, விலை 80ரூ.

பூசாரி ஜெகந்நாதன் தலைமையில் நாலு தீர்த்த கலசத்தையும் ஐந்து நாள் நடையில் காலை ஒருவர், மாலை ஒருவர் என தலையில் சுமந்து கோமணாண்டி முருகனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் ஒரு குழுவினரின் அனுபவங்களை மிக இயல்பாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர்.

பாதயாத்திரை அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர, ராவணன் என்ற புனைப்பெயர் பூண்ட மணி என்னும் நாஸ்திகரும் இந்த குழுவை நைசாகத் தொடர்கிறார்! குழுவினரின் கடவுள் சார்ந்த நம்பிக்கைகள், தொன்மக் கதைகள், பக்தி சார்ந்த சடங்குகள் என சுவையாக இந்த யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார் நூலாசிரியர்.

– மயிலை சிவா

நன்றி: தினமலர்,16/7/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *