குளச்சல் போர்
குளச்சல் போர், எஸ்.ஆன்றனி கிளாரட், என்.டி. தினகர், ஆர். பிரேம்குமார், நகர்வு வெளியீட்டகம், விலை 100ரூ.
குளச்சல் போர் என்பது, திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் படைகளுக்கும் டச்சு கிழக்கிந்திய படைகளுக்கும் இடையே நடந்த மோதல் ஆகும். 1740-ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி, டச்சு கப்பல்களில் இருந்து குளச்சல் நகரை நோக்கி குண்டு மழை பொழியத் தொடங்கியதில் இருந்து, குளச்சல் போர் தொடங்கியது.
வரலாற்று முக்கியம் பெற்ற இந்தப் போரைப் பற்றிய அனைத்து விவரங்களும் இந்த நூலில் உள்ளன. விறுவிறுப்பான நாவலைப் போல இந்த நூலை எழுதியிருப்பவர்கள் எஸ்.ஆன்றனி கிளாரட், என்.டி.திவாகர், ஆர்.பிரேம்குமார் ஆகிய மூவர். பயனுள்ள வரலாற்று ஆவணம்.
நன்றி: தினத்தந்தி,8/11/2017.