குண்டலினி – சொல்லப்படாத ஒரு கதை
குண்டலினி – சொல்லப்படாத ஒரு கதை, ஓம் சுவாமி, ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், பக்.190, விலை ரூ.199.
குண்டலினி தியானம் செய்வதைப் பற்றிய விரிவான நூல். குண்டலினி அறிவியல் ஒரு பண்டைய கல்வியாகும். தகுதியானவர்களுக்கு குரு – சீடர் வழிமுறை மூலம் வாய்வழிப் பாரம்பரியத்தின் ஊடாக அது தலைமுறை தலைமுறையாகச் சொல்லித் தரப்பட்டிருக்கிறது.
குண்டலினியை எழச் செய்வது என்பது மனிதன் தன் உள்ளார்ந்த ஆனந்த நிலையை அடைவதுதான். இந்த ஆனந்த நிலையை கோபம், பேராசை, பயம், அகங்காரம் உள்ளிட்ட படலங்கள் மூடியுள்ளன. குண்டலினிப் பயிற்சியால் இந்த படலங்களைத் தாண்டி மேல் எழும்ப வேண்டும். குண்டலினியை மேலெழும்பச் செய்வது என்பது நாம் நம் வாழ்வில் தவறான விஷயங்கள் நம்மை ஈர்த்துக் கொண்டிருப்பதற்கு ஒரு முடிவு கட்டுவதாகும்.
உடலில் மூலாதாரச் சக்கரம், சுவாதிஸ்தான சக்கரம், மணிப்பூரகச் சக்கரம், அனாதகச் சக்கரம், விசுத்திச் சக்கரம், ஆக்ஞைச் சக்கரம், சகஸ்ராரம் சக்கரம் ஆகிய ஏழு சக்கரங்கள் உள்ளன. இந்தச் சக்கரங்களின் மீது மனத்தை ஒருமுகப்படுத்தி தியானம் செய்வதற்கான வழிமுறைகளை இந்நூல் கூறுகிறது.
நன்றி: தினமணி, 4/3/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818