ஏர்வாடியாரின் மனதில் பதிந்த மாண்புறு மனிதர்கள்
ஏர்வாடியாரின் மனதில் பதிந்த மாண்புறு மனிதர்கள், ஆர்.மோகன், வானதி பதிப்பகம், பக். 862, விலை 1000ரூ.
சாதனையாளர்களின் பண்புகள் பற்றிய பெட்டகம்.
ஏர்வாடியார் தன் இதழான கவிதை உறவில் தொடர்ந்து வெளியிட்டு வரும், ‘மனத்தில் பதிந்தவர்கள்’ என்ற கட்டுரைத் தொடர் அவ்விதழின் சிறப்புகளில் ஒன்று. அக்கட்டுரைத் தொடர் பிரபலங்கள் பலரைப் பற்றியது. நடைச் சித்திரமாக மட்டுமல்லாமல், பல துறைகளிலும் சிறக்கப் பணியாற்றுகிற பிரபல பிரமுகர்கள் குறித்த, சின்னஞ்சிறு தகவல் களஞ்சியமாக இந்நுால் தொகுக்கப்பட்டு உள்ளது.
பெருந்தகையோர், அரசியல் தலைவர்கள், ஆன்மிகச் சுடர்கள், இலக்கிய ஆளுமைகள், தமிழ் சான்றோர்கள், கவிதைக் குயில்கள், திரையுலக சிற்பிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், பல துறை வித்தகர்கள் ஆகிய தலைப்புகளில், 100 சாதனையாளர்களை இந்நுாலில் தொகுத்துள்ளார் ஆர்.மோகன்.
ஏர்வாடியார் கண்டு பழகிய சாதனையாளர்களின் சாதனைகளோடு, அவரது எழுத்தாளுமையையும் ஆராய்ச்சி முன்னுரையில் விவரித்திருப்பது போற்றக்கூடியதாக உள்ளது. ஒரு தொகை நுால் என்ற வகையில் சிறப்புடன் உள்ளது.
– இராம.குருநாதன்
நன்றி: தினமலர், 3/3/2019.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818