மகாரதத்தில் குறளின் குரல்
மகாரதத்தில் குறளின் குரல், கு.பாலசுந்தரி, மணிமேகலைப் பிரசுரம், விலை 80ரூ.
மகாபாரதமும், திருக்குறளும் பல நூற்றாண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்டவை என்றாலும், இரண்டு நூல்களிலும் உள்ள பல கருத்துக்கள் ஒன்றாக இருக்கின்றன என்பதை இந்த நூல் சிறப்பாக விளக்கி இருக்கிறது. ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு, அதில் மகாபாரதம் தொடர்பாகக் கூறப்பட்டுள்ள சம்பவங்கள், சிறுகதைகள் ஆகியவற்றைக் கூறி, அதே கருத்தை சுருக்கமாக விளக்கும் திருக்குறளை அடையாளப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்க முயற்சி.
இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 30 கட்டுரைகளும், நீதி நெறிகளைச் சொல்கின்றன என்றாலும், அவற்றை சிறு கதைத் தொகுப்பை படிப்பது போன்ற அனுபவத்தைக் கொடுத்து இருப்பதாக ஆசிரியரைப் பாராட்டலாம்.
நன்றி: தினத்தந்தி, 9/10/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818