மனம் எனும் வனம்
மனம் எனும் வனம், மாலன், கவிதா பப்ளிகேஷன், விலைரூ.60.
வனத்தின் வாசல் என்ற தலைப்பிலேயே உள்ள கவிதைகளின் தலைப்புகளை அறிமுகம் செய்த ஆசிரியரின் கவித்துவம் புலப்படுகிறது. எழுத்து இதழில் கவிதை பயணம் துவங்கிய மாலன், கதாசிரியர், கட்டுரையாளர், விமர்சகர், பத்திரிகையாளர் என்று பன்முகம் காட்டி ஜெயித்தவர்; புதுக்கவிதைகளிலும் ஜெயித்து உள்ளார்.
கொரோனா பற்றி பாடுகிறார்; குறும்பு கொப்பளிக்கிறது. என் கவிதையைப் போல நீ எடை குறைவு எனினும் வீரியம் அதிகம்! கொரோனா மற்றும் கவிதைக்கும் எடை குறைவு தானாம். தாக்கும் சக்தி மிக அதிகமாம். எத்தனை உண்மை!
– சீத்தலைச் சாத்தன்
நன்றி: தினமலர், 24/10/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818