மனம் மயக்கும் கலை – ஹிப்னாடிசம்

மனம் மயக்கும் கலை – ஹிப்னாடிசம், ஹிப்னோ ராஜராஜன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், பக்.368, விலை ரூ.380.

ஹிப்னாடிசம் என்றால் பிறரைத் தன்வசப்படுத்தும் கலை என்பதை மட்டுமே பெரும்பாலோர் அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் அது நம் மனத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் கலை என்பதோடு, தியானம், மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சி, கண்களுக்குச் சக்தியூட்டுதல், யோக நித்திரை போன்றவற்றைச் சார்ந்த பயிற்சியாகவும் இக்கலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை எடுத்துரைக்கிறார் நூலாசிரியர்.

ஹிப்னாடிசத்தின் வரலாறு, அதன் முன்னோடிகள் பற்றி விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஹிப்னாடிசத்தின் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சகஜ நிலைக்குத் திரும்பச் செய்வது, கடுமையான நோய், தீர்க்க முடியாத உடல்நோய் இருப்பதாக எண்ணுபவர்களின் மனதை ஆரோக்கியத்தின் பக்கம் திருப்புதல், மனதில் ஆழமாகப் பதிந்த தேவையற்ற கருத்துகளை, துயர சம்பவங்களை நீக்குதல் போன்றவற்றுக்கு பயன்படுத்துவது குறித்தும் இந்நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான மனநலம், உடல் நலம் பேணுவதற்கான தியான முறைகள், மூச்சுப் பயிற்சி, உள்ளிட்டவை மேற்கொள்வதற்கான விளக்க குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

இன்றைய பரபரப்பான இயந்திரமயமான வாழ்க்கை சூழலில், நம் மனத்தையும், உடல்நலத்தையும் பேணுவதற்கான வழிமுறைகள் இந்நூலில் எளிய முறையில், அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

நன்றி: தினமணி, 7/8/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *