மனம் மயக்கும் கலை – ஹிப்னாடிசம்
மனம் மயக்கும் கலை – ஹிப்னாடிசம், ஹிப்னோ ராஜராஜன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், பக்.368, விலை ரூ.380. ஹிப்னாடிசம் என்றால் பிறரைத் தன்வசப்படுத்தும் கலை என்பதை மட்டுமே பெரும்பாலோர் அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் அது நம் மனத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் கலை என்பதோடு, தியானம், மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சி, கண்களுக்குச் சக்தியூட்டுதல், யோக நித்திரை போன்றவற்றைச் சார்ந்த பயிற்சியாகவும் இக்கலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். ஹிப்னாடிசத்தின் வரலாறு, அதன் முன்னோடிகள் பற்றி விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஹிப்னாடிசத்தின் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை […]
Read more