மனித வாழ்வில் ஆவணங்கள் வழக்கறிஞர் தரும் விளக்கங்கள்
மனித வாழ்வில் ஆவணங்கள் வழக்கறிஞர் தரும் விளக்கங்கள், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நந்தவன பதிப்பகம், பக். 166, விலை 200ரூ.
கணினி மயமாக்கப்பட்ட இன்றைய காலக்கட்டத்தில், சொத்து சம்பந்தமான ஆவணங்களை எப்படி எழுதுவது? அதை எப்படி பதிவு செய்வது என்பது தெரியாமல் கிராமப்புற மக்கள் திண்டாடுவதை நாம் காண்கிறோம். அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் இந்நுால் எழுதப்பட்டு உள்ளது.
இந்நுாலாசிரியரும் வழக்கறிஞருமான கிருஷ்ணமூர்த்தி, சொத்து சம்பந்தமான பிரச்னைகள், அதை பதிவு செய்யும் முறைகள், அதில் ஏற்படக்கூடிய வில்லங்கங்கள், அதற்கான தீர்வுகள் மற்றும் பல்வேறு விபரங்களையும் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கி இருக்கிறார்.
நன்றி: தினமலர், 8/9/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818