மரியா மாண்டிசோரியின் மனிதன் உருவாகிறான்
மரியா மாண்டிசோரியின் மனிதன் உருவாகிறான், தமிழில்: மீனாட்சி சிவராமகிருஷ்ணன், முல்லை பதிப்பகம், பக்.136, விலை ரூ.100.
மாண்டிசோரி பள்ளிகள் என்றால் நமக்கு சிறுகுழந்தைகளுக்கான பள்ளிகளே நினைவுக்கு வரும். ஆனால் வெளிநாடுகளில் மாண்டிசோரி கல்விமுறையைப் பின்பற்றுகிற கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஹாலந்தில் 5 பல்கலைக்கழகங்கள் உள்ளன. பாரிஸில் தனியார் மாண்டிசோரி கல்லூரி உள்ளது.
இந்த நூல் மாண்டிசோரி கல்விமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி கற்கும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சொல்லும் இந்நூல், வெறும் வேலைக்கான கல்வி என்பதில் இருந்து மாண்டிசோரி கல்விமுறை முற்றிலும் மாறுபடுகிறது என்கிறது.
கல்விமுறை என்பது மனிதனின் ஆளுமையானது சுதந்திரத்தையடையச் செய்யக் கூடிய உதவியாகப் பார்க்கப்பட வேண்டும் என்று இந்நூல் கூறுகிறது.
தற்கால உலகில் மனிதன் வாழும் நிலையை அறிந்து கொண்டு உருவாக்கப்படும் பாடத்திட்டம் நமக்குத் தேவை. அது வரலாற்றினைப் பரந்ததொரு நோக்குடனும் மனித இனம் விரிவடைந்திருப்பதையும் மனதில் கொண்டுஅமைக்கப்பட வேண்டும்.
இந்நாளையச் சுற்றுச்சூழலுடன் ஒத்துவாழ உதவாத அறிவினால் மனிதனுக்கு என்ன பிரயோசனம் என்று கேட்கிறது.
அத்தகைய பாடத்திட்டத்தின்படி, எழுத்து, பேச்சு, பழக்க,வழக்கங்களை கற்றுக் கொடுப்பது எவ்வாறு என்று இந்நூல் விளக்குகிறது. கல்விமுறை தொடர்பாகச் சிந்திக்க வைக்கிற சிறந்த நூல்
நன்றி: தினமணி, 7/1/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818