மாயாஜாலமான மணவாழ்க்கை – மறந்து போன ரகசியங்கள்

மாயாஜாலமான மணவாழ்க்கை – மறந்து போன ரகசியங்கள், நாகலட்சுமி சண்முகம், எம்பஸி புக்ஸ், பக்.230, விலை ரூ.250,

மண வாழ்க்கையில் பிரச்னைகள் வராமலிருக்க, அப்படி வந்தால் அவற்றைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி இந்நூல் பேசுகிறது.

விவசாயம், கைத்தொழில், மருத்துவம் என எல்லா அறிவுகளையும் தனிநபர்களின் அனுபவ எல்லைகளுக்குள் மட்டுமே சுருக்கி, அந்த அனுபவங்களின் அடிப்படையில் தனிநபரோடு தொடர்புடைய நபர்கள், குழுக்கள் மட்டுமே குறிப்பிட்ட விஷயங்களில் தேர்ச்சி பெற்று, சிறந்து விளங்குவது நமது மரபு. அதிலும் குடும்ப விஷயங்களில் பகிர்தலின் எல்லையோ மிகமிகக் குறுகியது.

தனிநபர் அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து அதைப் பொது அறிவாக்கி, எல்லாரும் பயன்படக் கூடியவகையில் அதை மாற்றி, வளர்த்தெடுத்து அறிவியலாக்க வேண்டிய தேவை உள்ளது.

இந்த நூல் மண வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, அவற்றைத் தீர்க்க நடைமுறை சார்ந்த வழிகளை அறிவியல்ரீதியில் கூறுகிறது. மண வாழ்க்கை சிறப்பாக அமைய ஏழு ரகசியங்களை இந்நூல் அறிமுகப்படுத்தி, அந்த ரகசியங்களை நடைமுறைக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக விளக்குகிறது. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துகள் அடங்கிய நூல்.

நன்றி: தினமணி, 5/6/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *