மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறு
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறு, வெளியீடு: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், விலைரூ.50
திருக்கோவில் வெளியீடாக வந்துள்ள நுால். மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் தல வரலாறு பதிப்பிக்கப்பட்டுள்ளது. காப்பில் துவங்குகிறது. கால வரிசைப்படி வரலாற்று தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
பாண்டியர் ஆட்சியில் துவங்கி நாயக்க மன்னர்கள் ஆட்சி வரை உள்ளது.கோவிலில் வழிபடும் முறை, தினசரி பூஜை விபரங்கள் விரிவாக தரப்பட்டுள்ளது. திருவிழாக்கள், உப கோவில் விபரங்கள், கோவில் அமைப்பு முறை, நடந்துள்ள திருப்பணிகள் போன்ற விபரங்களும் கூறப்பட்டுள்ளன.
தலக்குறிப்பில், இலக்கியம், கல்வெட்டு, ஓவிய, சிற்பங்கள் பற்றிய தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. கோவில் சார்ந்த ஏராளமான வண்ணப்படங்கள் இடம்பெற்று உள்ளன. மிகத் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் பற்றிய முழு விபரங்களை உள்ளடக்கியது. பக்தர்களுக்கு மிகவும் உதவும்.
நன்றி: தினமலர், 25/10/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818