மார்டன் தியேட்டர்ஸ்
மார்டன் தியேட்டர்ஸ், ரா. வேங்கடசாமி. விஜயா பப்ளிகேஷன்ஸ், விலை 120ரூ.
திரைப்படத் தயாரிப்பில் ஜெமினி, ஏவி.எம்., பட்சிராஜா, ஜுபிடர் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலக்கட்டத்தில், அவர்களுடன முன்னணியில் இருந்த நிறுவனம் “மார்டன் தியேட்டர்ஸ்” இதன் அதிபரான டி.ஆர்.சுந்தரம், 97 படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.
அவர் மறைவுக்குப்பின் நிர்வாகத்தை ஏற்ற அவர் மகன் ராமசுந்தரம், படங்களின் தயாரிப்பு எண்ணிக்கையை 118 ஆக உயர்த்தினார். தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படமான “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்தைத் தயாரித்தவர் டி.ஆர். சுந்தரம்தான்.
மாடர்ன் தியேட்டர்சில் பணியாற்றிய கலைஞர் மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ், வி.என்.ஜானகி ஆகியோர் பின்னர் முதல் அமைச்சர் பொறுப்பை வகித்தனர். அரும்பெரும் சாதனைகளை நிகழ்த்திய மாடர்ன் தியேட்டர்ஸ் வரலாற்றை சுவையான ஒரு நாவல் போல் எழுதியுள்ளார், மூத்த எழுத்தாளர் ரா. வேங்கடசாமி.
ஏராளமான படங்கள். புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினால், முடிக்கும் வரை கீழே வைக்க மனம் வராது. சினிமா ரசிகர்கள், கலை மீது பற்றுள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
நன்றி: தினத்தந்தி, 15/2/2017.