மோகினி

மோகினி, வ. கீரா, யாவரும் பப்ளிஷர்ஸ், பக். 104, விலை 90ரூ.

கிராமத்தில் இருந்து, நகரத்திற்கு இடம் பெயர்ந்து வரக்கூடிய மனிதர்களின் வாழ்வியல் சச்சரவு, ஒரு கிராமத்து காதல், காமம், வாழ்வியல், கலாசாரம் உள்ளிட்டவை இடம் பெறும் வகையில், ‘மோகினி’ என்ற பெயரில் சிறுகதை தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இதில் ‘தமிழு’ என்ற சிறுகதையில் வரும், பாலியல் தொழில் செய்யக்கூடிய பெண், தன் மகளை அத்தொழிலில் வர விடாமல் பாதுகாக்கிறாள். ஆனால் அந்த ஊரில் உள்ள இளைஞர்களிடம் இருந்து, தன் மகளை காப்பாற்ற, அவள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.

இவ்வாறு பலரின் மனதை உறைய வைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.

நன்றி: தினமலர், 7/1/2017.

Leave a Reply

Your email address will not be published.