நாளும் நலம் நாடி
நாளும் நலம் நாடி, சி.அசோக், மணிமேகலை பிரசுரம், விலை 225ரூ.
மாறிவரும் உணவு பழக்கங்களின் காரணமாக இன்று எண்ணற்ற நோய்கள் நம்மை ஆட்கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களுக்கான காரணங்கள், அவற்றில் இருந்து விடுபடுவதற்கான தீர்வுகள் மற்றும் அந்த நோய்கள் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை கூறுவதே இந்நூல்.
அகில இந்திய வானொலி, திருச்சி கோடை எப்.ம்., தருமபுரி எப்.எம். ஆகியவற்றில் ‘நாளும் நலம் நாடி’ என்கிற தலைப்பில் மருத்துவம் தொடர்பாக தான் ஆற்றிய சொற்பொழிவுகளை எழுத்து வடிவமாக்கி புத்தகமாக தந்து இருக்கிறார் மருத்துவர் சி.அசோக். முதல் தொகுதியாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் உயர் ரத்த அழுத்தம், நீரழிவு மற்றும் மூட்டுவாதம் ஆகிய நோய்கள் குறித்து தெளிவுபடுத்தி இருக்கிறார்.
நன்றி: தினத்தந்தி, 21/11/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818