நாம் வணங்கும் சித்தர்கள்
நாம் வணங்கும் சித்தர்கள், த.உத்திரகுமாரன், பூம்புகார் பதிப்பகம், விலைரூ.575.
பரந்த மனப்பான்மையுடன் வாழ்ந்த சித்தர்களின் ஆன்மிகக் கருத்துகளை தெளிவாக, எளிய தமிழ் நடையில் விளக்கும் நுால். பெயர் மட்டுமே தெரிந்த சித்தர்களின் வரலாறும், அவர் தம் கொள்கைகளையும் தெரிந்து கொள்ளலாம். படிப்போருக்கு இன்பம் பயக்கும்.
ஜாதிப் பாகுபாடு கூடாது என்பதை சிவவாக்கியர், அவ்வையார், பாரதியார், குதம்பைச்சித்தர் பாடல்கள் மூலம் விளக்குகிறார்; அஷ்டமா சித்திகள் எட்டையும் விளக்கியுள்ளார்; அஷ்டாங்க யோகங்களையும் விளக்கி, தத்துவங்கள் 96 என்பதை பட்டியலிட்டுள்ளார். திருக்குறளுடன் ஒப்பிட்டுள்ளார்.
அபிராமி பட்டர், ராமலிங்க அடிகளார் பாடல்களும் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன. ஆன்மிக அன்பர்கள் படிக்க வேண்டிய நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து
நன்றி: தினமலர், 31/10/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031390_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818